Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மக்கள் போராட்டங்களை கையாள என்பிபிக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவைப்படுகிறது!

அபிவிருத்தி பற்றி பேசும் இவர்கள் புதிதாக எந்தவொரு அபிவிருத்தியையும் செய்யவில்லை.

யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

என்.பி.பி. ஜே.வி.பி இரண்டும் ஒன்றுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. கொள்கை ஒன்றுதான். சர்வதேசத்தின் உதவிக்கான வேறு வேறு தோற்றப்பாட்டை காடுகின்றனரே தவிர வேறெந்த விடயமும் இல்லை.

கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் தமிழ் மக்களை மிரட்ட நினைத்தால் அது அவரது இயலாமையாக இருக்கும். ஏனெனில் தமிழ் தரப்பு இவரைப்போல பலரை, பலரது மிரட்டலை கண்டது. இவரது புலுடா இனியும் தமிழ் மக்களுடம் எடுபடாது.

கடந்த தேர்தல் காலத்தில் சொன்னதை செய்வதற்கு அவர்கள் தற்போது தயாராக இல்லை. ஏனெனில் தங்களுக்கு எதிராக வர இருக்கின்ற மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் தேவையாக இருக்கின்றது.

அத்துடன் அபிவிருத்தி பற்றி பேசும் இவர்கள் புதிதாக எந்தவொரு அபிவிருத்தியையும் செய்யவில்லை.

குறிப்பாக பொய் மட்டுமே இவர்களது செயற்பாடுகளாக இருக்கின்றது. சொல்லாடல்கள் வித்தியாசமாக இருக்கின்றதே தவிர உள்ளடக்கங்கள் ஒன்றுதான்.

குறிப்பாக கடந்த அரசுகளின் நிலைப்படே இவர்களது பயணமும் தொடர்கின்றது. குறிப்பாக புத்த விகாரை கட்டுமாணங்கள் தொடர்கின்றன, கைதிகள் விடுவிக்கப்படவில்லை, இதை தடுக்கவும் இல்லை.

தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . மாவட்டத்தில் இருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் எதை செய்தோம் என்பதை மக்களுக்கு கூறவேண்டும் என மேலும் தெரிவித்தார்.