Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள்: கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை!

தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் : 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இந்து சம்மேளனம் கோரிக்கை.

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றின் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் ஜனநாயகக் குரலை முடக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் சில ஜனநாயக அமைப்புகளால் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத கூறுகளால் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், ஞானசார தேரர் முன்னெடுத்துள்ள சேவைகளையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பட்டிலிட்டுள்ளனர்.

அந்தந்த மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் சமாதானத்தை நிலைநாட்டவும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீகத் தளங்களை அழிக்கக்கூடிய முரண்பாடுகளை இல்லாதொழிக்கவும் ஞானசார தேரர் பாடுபட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்திருந்தது.

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.