Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரத்துக்குள் முடிவு என்கிறது பிரதான எதிர்க்கட்சி

.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவது தொடர்பில் அடுத்தவார இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொறடாவுமான கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில்,

சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடாபில் பரிசீலிக்க வேண்டும் என்று எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் அந்த விடயம் சம்பந்தமாக அடுத்தவாரம் இறுதி முடிவினை எடுப்போம் என்றார்.

முன்னதாக, எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சபாநாயகர் தவறினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை விடுத்திருந்தார்.

குறிப்பாக, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சட்டமா அதிபர் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த 10ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமத்ன தனது முடிவினை அறிவித்திருந்தார்.

இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அந்த அறிவிப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததோடு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை ஆகியவற்றை சபையில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது.

எனினும், அதற்கு ஆளும் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கைகளை நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்த உறுப்பினர்கள் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அடுத்தவாரம், பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த அறிக்கையை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.