Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மே தினப் பேரணிகளுக்காக அதிகளவிலான மக்கள் தொகை! 565 பேருந்துகளுக்கு கட்டணம்! எங்கிருந்துப் பெறப்பட்ட பணம்? ஆராய தொடங்கியுள்ளது புலனாய்வுத் துறை!

தம்மிக பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினப் பேரணியில்... புலனாய்வுத் துறையினர் இரகசியமான முறையில் ஆராய தொடங்கியுள்ளனர்.

மே தினப் பேரணிகள் தொடர்பில் ஆராயும் புலனாய்வுப் பிரிவு: எங்கிருந்துப் பெறப்பட்டது பணம்?

அரசியல் கட்சிகளின் தொழிலாளர் தினத்துக்காக அண்மையில் இடம்பெற்ற மே தினப் பேரணிகளில் கலந்துக் கொண்ட மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் புலனாய்வுத் துறையினர் இரகசியமான முறையில் ஆராய்ந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆராய்ச்சியின் நிறைவில் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

மே தினப் பேரணிகளுக்காக வருகைத் தந்திருந்த மக்கள் தொடர்பில் வெளியான புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் அந்தந்த கூட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு சென்று சேகரித்த ஏனைய தகவல்கள் போன்றவற்றை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதிகளவிலான மக்கள் தொகை

இந்நிலையில், இம்முறை மே தினப் பேரணிகளுக்காக அதிகளவிலான மக்கள் தொகை பங்குபற்றியிருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் தேர்தல்களை மையப்படுத்தி மே தினப் பேரணிகளுக்காக அதிகளவான மக்களை வரவழைக்க அரசியல் தலைவர்கள் பாரிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தது. இம்முறை மே தினப் பேரணிகளுக்காக சுமார் 200 கோடி ரூபாய் செலவழிந்துள்ள நிலையில் இதில் அதிகளவான தொகை மே தினப் பேரணிகளுக்காக மக்களை வரவழைக்க செலவிடப்பட்டுள்ளது.

எங்கிருந்துப் பெறப்பட்ட பணம்?

இந்தத் தொகை எங்கிருந்து பெறப்பட்டது என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றனர். மே தினப் பேரணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் 565 பேருந்துகளுக்கு கட்டணம்  செலுத்தப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. போக்குவரத்துக்கு மேலதிகமாக வருகைத் தந்தவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய செலவுகளுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டுள்ளது.

தம்மிக பெரேராவின் பங்கேற்பு, இலங்கையின் முதற்தர செல்வந்தர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் விளங்கும் தம்மிக பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினப் பேரணியில் கலந்துக்கொண்டிருந்தார். அவருக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் சுமார் 30,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், குறித்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு தொழிற்சங்கத்தையும் ஆரம்பிக்க இடமளிக்காத நபர் தொழிலாளர் தின மேடையில் ஏறியிருந்தமை அதிருப்தியான ஒரு நிலையை உருவாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.