என் உடலை ஆயுதமாக ஏந்துங்கள். ஏந்தியாவது மக்களைத் திரட்டுங்கள்!
கால ஓட்டம் எத்தனை விதமான இனத் துரோகிகளை எல்லாம் அடையாளம் காட்டி நிற்கின்றது? - நன்றி முத்துகுமரா...
நன்றி முத்துகுமரா இனத்துரோகிகளை சரியாகவே அம்பலப்பத்தி நிற்கின்றாய்…
நிராகரித்தவர்களிடமே அதிகாரத்தை கொடுத்துவிட்டு...
மாவீரன் முத்துகுமாரின் தியாகம், அவன் கனவை சாதிக்க முடியாமல் போனது. ஆனாலும்
இனத் துரோகிகள் யார் என்பதை அம்பலப்படுத்தி நிற்கின்றது.
கால ஓட்டம் எத்தனை விதமான இனத் துரோகிகளை எல்லாம் அடையாளம் காட்டி நிற்கின்றது?
முத்துகுமாரின் மரண சாசனம் தெள்ளத் தெளிவாகவே இருந்தது. என் உடலை ஆயுதமாக ஏந்துங்கள். ஏந்தியாவது மக்களைத் திரட்டுங்கள்.
அந்த மக்கள் புரட்சியாக வெடிக்கட்டும். அந்த வெடிப்பு ஆட்சியாளர்களை அதிர வைக்கட்டும். அந்த அதிர்வு ஈழ மண்ணில் நடந்த இன அழிப்பு போரை தடுத்து நிறுத்தட்டும் என்ற கனவு கடைசிவரை நிறைவேறாமல் போனது பெரும் துரோகம்.
இனத் துரோகி கருணாநிதி இரவிரவாகவே கல்லூரி மாணவ மாணவிகளை விடுதிகளை விட்டு வெளியேற்றினார்.போராடியவர்களை எல்லாம் கூலிப்படைகளை ஏவி அடித்து அப்புறப்படுத்தினார். மடைமாற்றும் கங்காணி வேலையை கச்சிதமாகவே முடித்தது அந்த போலிக்கூட்டம் என இயக்குநர் ராமும் எழுதியிருந்தார்.
மற்றும் சில தமிழ்ச் ‘சொந்தங்கள்’ முத்துக்கமாரின் உடலைச் சுற்றி நின்று, உடல் இளையோரிடம் செல்லாமல் அரசியல் செய்து கொண்டிருந்தது.
கோடி பிணங்கள் விழுந்தாலும், சொக்கத் தங்கம் சோனியாவின் முகம் எந்த விதத்திலும் வாடிவிடக்கூடாது என்பதிலேயே கருணாவின் அதிகார மையம் எல்லோரையும் வதைத்துக் கொண்டிருந்தது.
காலம் எப்படிப் பட்டது தெரியுமா? அன்று முத்துகுமாரின் கோரிக்கையை நிராகரித்தவனிடமே, இன்று அரியணையை, ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு நிற்கின்றோம்.
அன்று முத்துகுமாரின் உடலோடு நின்றவர்கள், அழுது அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்று அந்த துரோகக் கும்பலுடனேயே சேர்ந்து அரசியல் செய்கிறார்கள். வெட்கமாவது மானமாவது. ஓட்டும் சீட்டும்தானே முக்கியம்.
அன்று முத்துகுமாரின் உடலோடு நின்று அரசியல் செய்தவர், பின்னாளில், ‘சில பேர் தமிழ்த்தேசியம்னு பேசிகிட்டு உள்ளே வர்றான். விட்டுறக்கூடாது‘ என சுயரூபத்தைக் காட்டி அம்பலப்பட்டுப் போனார். அன்று இனத்துரோகி கருணாநிதி என மூச்சக்கு முன்னூறு தடவை கத்திய வைகோ, இன்று இனத்தோடு சேர்ந்துகொண்டு ‘என்னை மீறிதான் திமுகவை வீழ்த்த முடியும்’ என்கிறார்.
காலம்தான் எப்படிப்பட்டது?
அன்று முத்துகுமாருடன் நின்று, கூடவே கருணாநிதிக்கு கங்காணி வேலை பார்த்தவர்கள் இன்று, அந்த கருணாநிதி கும்பலோடவே கும்மாலமிட்டு நிற்கிறார்கள்.
உயிர் எரிந்து கொண்டிருந்த நிலையில், உடல் எரிந்து நின்ற நிலையில், ‘திருமாவளவனிடம் சொல்லுங்க‘ என நம்பிக்கை வைத்து முனகிய முத்துகுமாருக்கு தெரியாது, அந்த வளவன்தான் இன்று, ‘மேதகு தலைவர் காதலுக்காக வேண்டி 16 பேரை சுட்டுக்கு கொன்றார்’ என உன்னதமான ஒரு மாவீரனையே கொச்சைப்படுத்தி நிற்பார் என்று.
காலம்தான் எப்படிப்பட்டது?
அன்று மேதகுவிற்காகவும், அம்மக்குளுக்காவும் தான் எங்கள் இயக்கம் என அணைகட்டி நின்றவர்கள், இன்று இத்தனை பர்சண்டேச் தான் ஈழம் பற்றி பேச முடியும் என ஒதுங்கிக் கொண்டார்கள். அன்று இயக்கம் ஏதும் கட்டாமல், எங்கோ ஒரு மூலையில் இருந்து வந்து,
முத்துகுமாரின் சடலத்தின் அருகே நின்று விட்டுப்போன சீமான்தான் இன்று,
முத்துகுமாரின் கனவை சுமந்து நிற்கின்றார். அவன் காட்டிய திசைவழியில் நிற்கின்றார்.
அன்று தமிழ்த்தேசியம் என்றால் திராவிடம், திராவிடம் என்றால் தமிழ்த்தேசியம் என்று முழங்கிய கூட்டத்தோடு நின்ற தமிழ்ப் பிள்ளைகள் ஆயிரமாயிரம் பேர்கள்தான் இன்று தமிழ்த்தேசிய பாதையில், அவர்களுக்கேற்ற இயக்க கட்டமைப்பில் நிற்கின்றார்கள்.
துரோகிகள் என்றும், எந்த வடிவத்திலும் துரோகிகளாகவே நிற்பார்கள்.
இனப்பற்றாளர்கள் என்றும், எந்த வடிவத்திலும் இனப்பற்றோடுவே நிற்பார்கள்.
நன்றி முத்துகுமரா
இனத்துரோகிகளை சரியாகவே அம்பலப்பத்தி நிற்கின்றாய்…
பா.ஏகலைவன்
பத்திரிகையாளர்.


