Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பொங்குதமிழ் நிகழ்வுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் வாழ்த்துச் செய்தி!!!

ஏற்பாடு செய்த எங்கள் உறவுகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பொங்குதமிழ் நிகழ்வுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் வாழ்த்துச் செய்தி!!!

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களையும், தமிழீழ விடுதலைக்காக எரிந்து சாம்பலாகிய தமிழக உறவுகளையும் நெஞ்சில் நிறுத்திக் கொண்டு,
1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்திலும் 1985 ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகளிலும் 2001 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் பிரகடனத்திலும் 2003 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபிலும் 2013ஆம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முரசறைவு செய்யப்பட்ட சுதந்திர சாசனத்திலும், உறுதி செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் சுயநிர்ணைய உரிமையின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பை நடாத்தவேண்டும் எனக்கோரி எதிர்வரும் ஒன்பதாம் தேதி மெல்பேர்ன் நகரில் பெடரேசன் சதுக்கத்தில் நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் நான் பெருமிதமும் உற்சாகமும் அடைகின்றேன். 

இதனை ஏற்பாடு செய்த எங்கள் உறவுகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நிகழ்வுக்கு அனைத்து தமிழ் மக்களும் குறிப்பாக மெல்பேர்ன் நகரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் சென்றுஆதரவை வழங்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். சுயநிர்ணய உரிமை ஐக்கிய நாடுகள் சபை சாசனத்திலும், சர்வதேச அரசியல் குடியியல் மனித உரிமை பிரகடனத்திலும், சர்வதேச பொருளாதார, சமூக கலாச்சார பிரகடனத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ள ஒரு உரிமையாகும். சுயநிர்ணய உரிமையின் அங்கீகாரம் மற்றைய உரிமைகளை அனுபவிப்பதற்கு அத்தியாவசியமானதென பொதுச் சபைத் தீர்மானம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எல்லா உரிமைகளுக்கும் தாய் உரிமை சுயநிர்ணய உரிமையாகும். 

எங்கள் போராட்டத்தை நாங்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நடாத்தி வருகின்றோம். ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானம் 2625 (1970), இன்று சுயநிர்ணய உரிமையின் மரபுவழிச் சட்டமாக கருதப்படுகின்றது. அந்தத் தீர்மானத்தில் ஒரு இனம் தான் வாழும் நாட்டில் அதில் அரசியலில் காத்திரமாக பங்களிக்க வாப்பில்லாவிடில் அந்த இனம் பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் உரிமை அங்கீகரித்துள்ளது. பான்கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கையில், சிறிலங்காவின் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணம் ஈழத்தமிழ் மக்கள் அந்த அரசியல் நீரோடையில்,அரசியலில் காத்திரமான பங்கை வகிப்பதற்கான வெளி இல்லை என்பதே அல்லது இல்லை என்று கருதப்படுவதே என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

மேலும் கியூபெக் தொடர்பான கனடா உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், கட்டன்கீஸ் மக்கள் அமைப்பு (Katangese Peoples’ Congress v Zaire),கமரூன் (Kevin Ngwanga Gumne v Cameroon) தொடர்பான வழக்குகளில், ஆபிரிக்க மக்கள் மனித உரிமை தீர்ப்பாயம் ஒரு இனம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் பொழுது, பாரிய மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படும்பொழுது அது பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும்உரிமை உண்டு என்று கூறியுள்ளார்கள். இன்று இனப்படுகொலைக்குள்ளாகிய நாம் ஈடுசெய் நீதி அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் மற்றும் காலணித்துவ ஆட்சியாளர்கள் சிறிலங்காவை விட்டு சென்றபின்னர் எமது இறைமை மீண்டும் எம்மிடமே வந்த்தது என்ற அடிப்படையிலும்,
மும்முனையில் நாங்கள் இன்று எங்களுடைய போராட்டத்தை நடாத்திவருகின்றோம். எங்கள் போராட்டத்திற்கு வலுசேர்ப்பது மக்களின் கடமையாகும். நாங்கள்தான் எங்கள் உரிமைகளை, எங்கள் அரசியல் பெருவிருப்புக்களை முதலில் உரத்துக் கூறவேண்டும்.

அதன் பின்னர் தான் சர்வதேசம் அதனைக்கேட்கும். அதன் ஒரு நிகழ்வாகத்தான் இந்த பொங்கு தமிழ் நிகழ்வு அமைகின்றது. 2001 ஆம் ஆண்டு யாழ் நகரில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு நடந்த அந்த பொங்குதமிழ் நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத் தமிழ் மக்களின்உண்மையான பிரதிநிதிகள் (Authentic Representative) என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்பேசித்தான் தமிழ்த் தேசியப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்ற அந்த கோரிக்கைகள், அந்த பிரகடனங்கள் பின்னர் நோர்வேயின் அனுசரணையுடனான பேச்சுவார்த்தைக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்தது. அந்த வகையில் எதிர்வரும் 9ந் திகதி மெல்பேர்ன் இல் நடைபெற இருக்கும் பொங்கு தமிழ் நிகழ்வும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என நான் நம்புகின்றேன். மெல்பேர்ன் நகரில் நடைபெறவிருக்கும் பொங்கு தமிழ் நிகழ்வைத் தொடர்ந்து ஈழத்திலும், தமிழகத்திலும், கனடா, ஐக்கிய இராச்சியம், , ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி , நெதர்லாந்து ஆகிய நாடுகளில், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தமிழ் தேசியப்பிரச்சனை. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு பொதுவக்கெடுப்பின் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும் என்ற ஈழத் தமிழர்களின் அரசியல் பெருவிருப்பு பொங்கட்டும்! சர்வதேச தளங்களில், சர்வதேச அரங்குகளில் பொங்கட்டும்!

காணொளி: https://tgte.tv/v/vQgZKy
தமிழரின்தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர் 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்