Breaking News
கொதிகலன் (Boiler) குறித்த இளைஞன் மீது விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
மலேசியா கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த மஸ்கெலியா இளைஞன்.
மலேசியாவில் உயிரிழந்த மஸ்கெலியா இளைஞன்.
மஸ்கெலியா மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது இளைஞன் பணிக்காக மலேசியா சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
மலேசியா கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் (Boiler) குறித்த இளைஞன் மீது விழுந்ததில் படுகாயமடைந்து கோலாலம்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த அந்நாட்டு பொலிஸார் இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இளைஞனின் தந்தையிடம் ஒப்படைக்கப்படவுள்ள சடலம் அவரின் சொந்த ஊரான மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளதாக அவரது தந்தை தெரிவித்தார்.