ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது!
.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு முதல் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க நேற்று தெரிவித்தார். அரசியலமைப்பிற்கு அமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில்பொலிஸ்மா அதிபர், அரச அச்சகமா அதிபர் மற்றும் அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் விளக்கியிருந்தது. இந்தநிலையில் தேர்தலுக்கான திகதியைத் தீர்மானித்தல் மற்றும் வேட்பு மனுவைக் கோருதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு முதல் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது.