வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு!
.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தின் பெயரை பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடிய புகாரில் பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு பாடல் ஒன்றை பாடினார். இது சர்ச்சையானது. பின்னர் இதுதொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவாக அதே பாடலை பாடினார். இதையடுத்து ஒரு சமூகத்தின் பெயரை பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடியதாக சீமான் மீது சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.