தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள்; போராளிகள் குடும்ப நலக் காப்பகம் விடுத்துள்ள கோரிக்கை!
.
தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
202 4ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்றப் தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் என சகல தரப்புகளும், மக்களின் நலன் கருதி நீண்ட காலமாகவே எமது மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் அபிலாசைகளை உண்மையாகவும் உறுதிப்பாட்டுடனும் அடைவதற்கான இன்றியமையாத நான்கு அம்சக் கோரிக்கைகளை தமிழ் மக்களின் நலன் கருதி எம் அமைப்பானது முன்வைப்பதாக தெரிவித்தது.
இதற்கமைய குறிப்பிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது வேட்பாளர்களுக்கும் எமது அமைப்பானது ஆதரவு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கும் என்பதனை பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், முழு நாட்டிலும் மாற்றத்தை எதிர் பார்க்கின்ற மக்கள் இருக்கின்ற போதிலும் தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது கட்சிகளினதும் அரசியல் பிரமுகர்களினதும் தலையாய கடமையாகும் எனவும், வலியுறுத்தியுள்ளது.