Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தனியார்மயமாக்கலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தும் மஹிந்த.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச.

தனியார்மயமாக்கலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தும் மஹிந்த.

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ச இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வெளியிட்ட அறிக்கையில் தேசிய சொத்துக்கள் மற்றும் அரச நிறுவனங்களை விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் இடைக்காலத் தன்மையை சுட்டிக்காட்டிய அவர் அரச சொத்துக்கள் தொடர்பான தீர்மானங்களை, வாக்காளர்களிடமிருந்து கிடைக்கும் ஆணைக்கேற்ப தீர்மானிக்க எதிர்கால நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக்‌ச வெளியிட்ட கடிதத்தில்,

“ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரச சொத்துக்கள் அல்லது நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகின்றேன்.

புதிய அரசாங்கம், அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை தேர்தலில் அவர்கள் பெற்றுக் கொள்ளும் ஆணைக்கு ஏற்ப கையாள முடியும்.

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பணியாற்றிய நான் அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆட்சியின் போது விற்பனை செய்யவில்லை. நாடு பொருளாதார வளர்ச்சியை கண்டது” என குறிப்பிட்டுள்ளார்.