விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை
.
விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை என்பதால் குறித்த ஒரு நபருக்கே வாக்களிக்குமாறு தான் எந்தத் தருணத்திலும் கூறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாா்.
தமிழ் பொது வேட்பாளா் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேலும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது, ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் தொிவித்துள்ளாா்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள் குறித்தே தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என தான் முன்னா் கூறியிருந்ததாகவும், எந்த ஒரு சிங்கள வேட்பாளரினாலும் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற முடியாமல் போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலை கவலைக்கிடமாகலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தொிவித்தாா்.
விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம் என்பதால், இது தொடர்பில் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தொிவித்துள்ளாா்.