Breaking News
அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழுவின் தலைவர் செனெட்டர் கார்டின்கவலை!
ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் தினம்.

நினைவேந்தல் தினத்தை அடிப்படையாக வைத்து கைதுகள் ; அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழு கவலை.
இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் தினத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற கைதுகள் குறித்து கவலையடைந்துள்ளதாக அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழுவின் தலைவர் செனெட்டர் கார்டின் தெரிவித்துள்ளார்.
கைதுகள் குறித்த அச்சமின்றி நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.