Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடமேல் மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்பு, இயற்கை எரிவாயு; இந்திய முதலீட்டாளர்கள்.

முதலீடு செய்ய விரும்பும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்

வடமேல் மாகாணத்தில் முதலீடு செய்யத் தயாராகும் இந்தியா: கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி மையமாக மாற்ற நடவடிக்கை.

இந்திய முதலீட்டாளர்கள் குழுவொன்று வடமேல் மாகாணத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.வடமேல் மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான தொழிற்சாலையை அமைக்க இந்திய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்

அதன்படி, இந்தியாவின் சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஸ்வரன் தலைமையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Fortress உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு கடந்த 30ஆம் தேதி வடமேற்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் நசீர் அகமட்டை சந்தித்து வடமேற்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.

வடமேற்கு மாகாணத்தை நாட்டின் கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி மையமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து வளங்களும் இந்த மாகாணத்தில் இருப்பதாகவும், மாகாணத்தில் முதலீடு செய்ய விரும்பும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநரிடம் கோரிக்கை

தகவல் தொழில்நுட்பம், இயற்கை எரிவாயு உற்பத்தி, ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி போன்ற துறைகளில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவித்த இந்திய முதலீட்டாளர்கள், அதற்குத் தேவையான பின்னணியையும் வசதிகளையும் செய்து தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர். இம்மாதம் 19ஆம் திகதி 70க்கும் மேற்பட்ட இந்திய முதலீட்டாளர்கள் குழுவொன்று வந்து வடமேற்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயவுள்ளதாக முதலீட்டாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

அமுல் பால் நிறுவனம்

பல வருடங்களுக்கு முன்னர் வடமேல் மாகாண சபை இயங்கிக்கொண்டிருந்த போது இந்தியாவின் பிரபல அமுல் பால் நிறுவனம் வடமேல் மாகாண சபையுடன் இணைந்து மாவத்தகம பிரதேசத்தில் பால் உற்பத்தி நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததுடன் அதற்கு தேவையான காணிகளை கூட அவதானித்து தெரிவு செய்திருந்தது.

எனினும், பல்வேறு காரணங்களால் முதலீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் இலங்கையில் இத் திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.