Breaking News
செந்தில் தொண்டமான் செய்த அட்டகாசங்கள் மிக அதிகம்; கைது நிச்சயம்
.
இலங்கை மக்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள். மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை என்று சிவில் சமூக செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்தார்.
இதேவேளை, இதற்கு முன்னர் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் அங்கு செய்த அட்டகாசங்கள் மிக அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் கைதாகப் போகின்றவர்களில் முக்கிய தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தமிழ் இணையதள செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.