Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர்.

இன்றைய காலத்தில் தொழிற் பயிற்சி மிக முக்கியமானது. அதன் அவசியம் இப்போது எல்லோராலும் உணரப்படுகின்றது.

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர்.
எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். தொழில் கல்வியின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன் தலைமையில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (17) இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் வைபத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில், 

இன்றைய காலத்தில் தொழிற் பயிற்சி மிக முக்கியமானது. அதன் அவசியம் இப்போது எல்லோராலும் உணரப்படுகின்றது.

அரச வேலை வாய்ப்பு என்பது மட்டுப்படுத்தப்பட்ட அளவாக மாறிக் கொண்டு வருகின்ற சூழலில், தனியார் வேலை வாய்ப்பையோ அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பையோ பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தொழிற் கல்வி அவசியமானது. அதுவும் இவ்வாறான சான்றிதழ் கற்கை நெறிகள் உங்களுக்கு கைகொடுக்கும்.

வடக்கு மாகாணத்தில் போரால் அழிவடைந்த தொழிற்சாலைகளை மீள உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த தொழிற்சாலைகள் இங்கு மீள இயங்கும்போது தொழிற் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்களில் முன்னுரிமை கிடைக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றது. 

எதிர்காலத்தில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளாமல் தொழில்களில் ஈடுபட முடியாத நிலைமை உருவாகி வருகின்றது. எனவே, இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் நீங்களும், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தத் தொழிற் கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறவேண்டும். 

பாடசாலை இடைவிலகலில் பெண்களை விட ஆண்களே அதிகமாக உள்ள நிலையில், இவ்வாறான தொழிற் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். எனவே, கல்வியிலிருந்து இடைவிலகும் ஆண்களை இவ்வாறான தொழிற்முயற்சிகளை நோக்கி ஈர்க்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கலந்துகொண்டார்.