Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்து: மீட்பு பணியில் சிக்கல் என்கிறார் அமைச்சர்.

.

தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை அடைய குழுக்கள் போராடி வருகின்றனர். 

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் நிலைமை 'மோசமாக இருக்கிறது' என்றும், நீர் வரத்து மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் தெலுங்கானா அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். 

இதனால் மீட்பு பணி மேலும் தொய்வடைந்துள்ளதாக தெரிகிறது. 

"சுரங்கப்பாதையில் இயற்கையான பாறைகள் தளர்வானதால், திடீரென தண்ணீர் மற்றும் சேறு உள்வந்து, சுரங்கப்பாதையில் சுமார் 12-13 அடி வரை நிரம்பியது. இது மிகவும் சவாலான சூழ்நிலை, மேலும் நெருக்கடியைத் தீர்க்க தொழில்நுட்ப வல்லுநர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்," என்று அமைச்சர் விளக்கினார்.

தண்ணீர் கசிவை வெளியேற்றவும், சிக்கியவர்களுக்கு பிராணவாயு அனுப்பும் பணியும் தீவிரம். 

"தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றவும், சுரங்கப்பாதையில் ஆக்ஸிஜனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையில் உள்ள சேறு மேடுகளை அகற்றி, விபத்து நடந்த இடத்தை அடைய மாற்று வழிகளை ஆய்வு செய்து வருகின்றனர்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

சிக்கியுள்ள தொழிலாளர்களில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனோஜ் குமார் (திட்டப் பொறியாளர்), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (களப் பொறியாளர்), ஜார்க்கண்டைசேர்ந்த சந்தீப் சாஹு (தொழிலாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த ஜடக்ஸ் (தொழிலாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த சந்தோஷ் சாஹு (தொழிலாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த அனுஜ் சாஹு (தொழிலாளர்), ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த சன்னி சிங் (தொழிலாளர்) மற்றும் பஞ்சாபை சேர்ந்த குர்பிரீத் சிங் (தொழிலாளர்) ஆகியோர் அடங்குவர்.