Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஏனைய கட்சிகளோடு சேர்ந்து திருமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டி!

.

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன் தெரிவிப்பு

வேட்பு மனு நியமன குழுவின் நேற்றைய வவுனியா கூட்டம் தொடர்பாக கிளிநொச்சியில் உள்ள எஸ்.சிறிதரனின் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் நியமனங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இன்று(நேற்று) வன்னி மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களுக்கான பெயர்ப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான நியமனப்பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனு நாளைய தினம்(இன்று) தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.