பெங்கொங் ஏரி அருகில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா; இராணுவத் தளமாகவும் பயன்படுத்தும் அபாயம்
.
இந்திய எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது பெங்கொங் ஏரியன் அருகில் சீன குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பெங்கொங் ஏரியின் குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா நிர்மாணித்தது.
அதன்படி, தற்போது அமெரிக்க மேக்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயற்கைக்கோளினால் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் பெங்கொங் ஏரியின் வடக்கில் புதிய கிராமம் ஒன்றையே சீனா உருவாக்கியுள்ளது.
எல்லையிலிருந்து சுமார் 36 கிலோமீட்டர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் இக் கிராமத்தில் 70 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இப் பகுதியைச் சுற்றிலும் இராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருவதோடு, கிராமங்களை விரிவுபடுத்தி மக்களை அங்கு குடியேற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேவையேற்படின் இதனை இராணுவ தளமாகவும் சீனா பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
17 ஹெக்டேர் அளவில் சுமார் 4,347 மீட்டர் தூரம் வீதி அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டில் பெங்கொங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன இராணுவத்தினர் ஊடுருவ முயன்றதும் குறிப்பிடத்தக்கது.