Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

விண்வெளியில் 16 முறை புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்!

.

விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) உள்ளிட்ட குழுவினர் புத்தாண்டை கொண்டும் போது அவர்கள் 16 முறை சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பார்கள் என்று குறிபபிடபட்டுள்ளது.தற்போது விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம் மற்றும் அவரது குழுவினர், புத்தாண்டில் மட்டும் 16 முறை சூரிய உதயங்களைப் பார்க்கும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

விண்வெளி மையம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் போது அவர்கள் சூரிய உதயத்தை காண முடியும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இது குறித்து விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2024 ஆம் ஆண்டு முடியும் போது எக்ஸ்ப்-72 குழுவினர் 16 முறையை சூரியோதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண்பார்கள்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் விண்வெளி வீரர் பேரிவில்மோருடன் போயிங் ஸ்டார்லிங் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் 9 நாள்களில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தொழில்நுட்பக் கோளாறுகளால் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுஇதனால், கிறிஸ்துமஸ் பண்டிகையையும் அங்கேயே கொண்டாடினார்.

இதுபற்றிய காணொளி ஒன்றை அமெரிக்க (United States) விண்வெளி நிறுவனமான நாசா பகிர்ந்துள்ளது.சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரிவில்மோர் மார்ச் மாதத்தில் பூமிக்கு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவர்கள் பெப்ரவரியில் திரும்புவதற்குத் திட்டமிடப்பட்டனர். ஆனால், ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ-10 பணியின் தாமதம் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.