Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்... கண்ணீர் கடலான வாடிகன்!

வாழும் காலம் வரை எளிமையாக வாழ்ந்து மறைந்த போப் பிரான்சிஸ்!

சாதாரண மர சவப்பெட்டியில் மட்டுமே தனது உடலை வைக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்திருந்ததே, அவர் எவ்வாறான தவ வாழ்வை வாழ்ந்து மறைந்திருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ள போதுமானது ஆகும்.

மறைந்த போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் கடந்த 21 ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு கடந்த 5 நாட்களாக உலகத் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வந்தனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் நேரில் கலந்து கொண்டு மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

இந்ந நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பிடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது மனைவி விக்டோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழக அரசு சார்பாக அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சி இத்தாலி நாட்டை சேர்ந்த கார்டினல் ஜியோவன்னி தலைமையில் நடைபெற்றது. இதில், 220 கார்டினல்கள் மற்றும் 750 ஆயர்கள் கலந்து கொண்டு இறுதிச் சடங்கு திருபலியை செய்தார்கள். இதைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் உடல் மத்திய ரோம் பகுதியில் உள்ள மரியா மாகியோர் பலிசிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு

 

மேலும், போப் பிரான்சிஸ் தனிப்பட்ட முறையில் அடக்கம் செய்யப்படுள்ளதாகவும், அவரது கல்லறை நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் எனவும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

போப் ஆக பதவி வகித்தவர்கள் மரணடைந்தால், அவர்களின் இறுதிச்சடங்கும், இறுதி ஊர்வலமும் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதற்காக கோடிக்கணக்கான திருச்சபை பணம் செலவிடப்படும். ஆனால், இதனை விரும்பாத போப் பிரான்சிஸ், தான் இறந்தால் தனது இறுதிச் சடங்கு மிக மிக எளிமையாக நடைபெற வேண்டும் என தனது திருச்சபை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். ஒரு சாதாரண மர சவப்பெட்டியில் தான் தனது உடலை வைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழும் காலம் வரை எளிமையாக வாழ்ந்து மறைந்த போப் பிரான்சிஸ், தான் மரணித்த பிறகும் எளிமையாக தனது இறுதிப் பயணம் இருக்க வேண்டும் என விரும்பினார். அந்த எளிமையும், கருணையும் மட்டுமே வாடிகன் நகரை நோக்கி சுமார் 2 லட்சம் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக செல்ல காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல.