Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: ஜெகதீஸ்வரன் எம்.பி

.

வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

விளையாட்டு துறை அமைச்சுககான உப குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சுக்கான உப குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

அதில் உறுப்பினராக  இருப்பதால் எமது பிரதேசத்தின் விளையாட்டுத் துறை தொடர்பாக பல விடயங்களை முன்வைக்க முடிந்தது. இது தொடர்பாக பல விடயங்களை சுட்டிக் காட்டினேன். ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கிற்கு தேவையான ஆளணி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அதனை பெற்றுக் கொடுக்க வேணடும் என கோரிக்கை முன்வைத்தேன்.

அத்துடன், பிரதேசத்தில் காணப்படும் விளையாட்டு கழகங்கள் தொடர்பாக சிறந்த அவதானத்தை செலுத்த வேண்டும் எனவும் வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

போதைப் பொருள் பாவனை, சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர், யுவதிகளின் அவதானத்தை நல்ல வழியில் கொண்டு வர விளையாட்டு துறை காணப்படுகின்றது. 

அதனை ஊக்குவிக்க வேண்டும. எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும், எழுத்து மூல முன்மொழிவுகளை வழங்குமாறும் இளைஞர், விவகார விளையாட்டு துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். 

அதற்கு அமைவாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் விளையாட்டுத்துறை சார்பாக ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் எனக்கு எழுத்து மூலமாக தந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.