Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலத்தில் பாலியல் வன்புணர்வு!

சவ கிடங்கில் என்ன நடந்தது! சம்பந்தப்பட்ட முன்று பேரை உடன் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!!

இச் சம்பவம் கடந்த 24 ம் திகதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவ கிடங்கில் இடம் பெற்று உள்ளது.
இது குறித்து மரணித்த பெண்ணின் (ஹட்டன் எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி தலைவர் கணபதி கனகராஜ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி தலைவர் கணபதி கனகராஜ் அவர்கள் இச் சம்பவம் குறித்து கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கடந்த 25 ம் திகதி கொண்டு வந்தும் கடந்த 8 நாட்களாக எவ்விதமான நடவடிக்கையும் இல்லாததால் இன்று மதியம் வைத்திய சாலையில் எபோட்சிலி தோட்ட மக்கள் ஒன்று கூடி மரணித்த பெண்ணுக்கு சவ கிடங்கில் என்ன நடந்தது என்பதை விபரமாக வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட முன்று பேரை உடன் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நாளை காலை 8 மணிக்கு மீண்டும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் தற்போது களைந்து செல்வதாக கூறி உள்ளனர்.