Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது: விசேட வர்த்தமானி வெளியானது Uthayam Editor 02July 26, 2024 3:11 am

.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று காலை (26) வெளியிட்டது.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் இது தொடர்பான வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரிய சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் அடுத்த மாதம் 14ம் திகதி வரை சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை கட்டுப்பணத்தை டெபாசிட் செய்யலாம்.

ஒகஸ்ட் 14ஆம் திகதி மதியம் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளராக இருக்கும் ஒருவர் ​50,000 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

வேட்பாளர் வேறொரு அரசியல் கட்சியால் அல்லது வாக்காளரால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக இருக்கும் போது 75,000 ரூபாய் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் அதிகாரத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Oruvan

Oruvan