Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நீதி வேண்டி செம்மணியில் ஏற்றப்படும் "அணையா தீபம்"

செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் விளக்கு ஏந்தி போராட்டம்!

நீதி வேண்டி செம்மணியில் ஏற்றப்படும் "அணையா தீபம்" - மூன்று நாள்கள் முன்னெடுக்க ஏற்பாடு!

செம்மணியில் எலும்புக் கூடுகளாக மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி அணையா தீபம் ஏற்றப்படவுள்ளதாக மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை முன்னெடுத்த குறித்த குழுவின் ஏற்பாட்டுக்குழுவின் பிரதினிதிகள் இது குதித்து மேலும் கூறுகையில் -

தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்றதே தவிர தீர்வுகள் எதுவும் கிடையாத போசுபொருளாகவே அது நீடித்துச்செல்கின்றது . 

அவ்வாறான நிலை இனியும் தொடரக் கூடாது, தமிழ் மக்கள் இழந்தவற்றையும் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும்  பொறிமுறையை நோக்கிய வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் 'அணையா தீபம்' போராட்டம் ஒன்று யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு,   நீதி வேண்டிய போராட்டமாக
'அணையா தீபம்" என்ற பெயரில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி 23,24,25 ஆகிய  3 நாள்களுக்கு அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இழந்த உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாளை மறுதினம் திங்கட்கிழமை 10 மணிக்கு ஆரம்பமாகும் இப்போராட்டம் இரவு பகலாக மூன்று தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ் வருகைதரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை
வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தனர்.

செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் விளக்கு ஏந்தி போராட்டம்!

செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி வருகின்ற 23, 24,25 ஆகிய நாட்களில் அனைத்து தமிழ் மக்களும் எம்மோடு இணைந்து விளக்கு ஏந்தி போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஒன்றிணைவோம் என வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி அவர்கள் (21.06.2025)  இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் விளக்கு ஏந்திய போராட்டத்திற்கான அழைப்பு ஒன்று பிடித்துள்ளார்.

காணொளி : https://youtu.be/pr2ROwErKoI