யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-02. போர்த்து கேயர் கால யாழ்ப்பாணக்குடியிருப்புகள் 1617 - 1658.
.
டச்சுகார்ர் காலம் 1658-1795
1658 யூன் 23 - போர்த்து கேயரின் கடைசி தரிப்பீடமான யாழ்ப்பாண கோட்டையை கைப்பற்றி அதை தம்வசப்படுத்தினர். அந்த கால கட்டத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் யேசுவின் சபைக்கு சொந்தமான ஒர் கல்லூரியும் ஐந்து குருவானவர்களும்,பிரான்சிஸ்கன் கன்னியர் மடமும்,டொமினிக்கள் ஆச்சிரமும்,வலிகாமத்தில் 14 கோவில்களும், தென்மராச்சியில் 5 கோவில்களும், பச்சிலைப்பள்ளியில் 3 கோவில்களும் நகரை அண்டிய தீவுகளில் ஒவ்வொரு கத்தோலிக்க கோவில்களும் இருந்தன. யாழ் கோட்டைக்குள்ளும் குருசு வடிவில் அமைக்கப்பட்ட கத்தோலிக்க கோவிலும் இருந்தது.
1658 ஆகஸட் 29 - வண டாக்டர் பால்தேயுஸ் என்பவரால் டச்சுகாரரின் சீர்திருத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1658 - செப்டொம்பர் 01 - டொன் லூயிஸ் பூததம்பியும் வேறு ஒரு சில போத்துக் கேயரும் டச்சுக்கார்ருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட சதிமுயற்சி,டொன் மனுவல் டி அந்திராடோ முதலியார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. பின் சதிகாரர் கொலை செய்யப்பட்டனர்.
1658 செப் - டொன் லுயில் பூதத்தம்பி போர்த்துக் கேயருடன் வைத்துக் கொண்ட துரோக செயல்களை தெரிந்திருந்தும் அதை தெரியப்படுத்தாமல் இருந்த காரணத்திற்காக யேசுவின் சபையை சேர்ந்த போத்துகேய குருவான வணக்கத்துக்குரிய கல்தேய்ரோ என்பவர் டச்சுகாரரால் தலை துண்டிக்கப்பட்டார்.
1658 - போர்த்துக்கேய குருமார் யாழ்ப்பாணத்தை விட்டு டச்சுகாரர்களால் விரட்டப்பட்டனர்.
1658 செப் 19 - ரோமன் கத்தோலிக்க குருக்களை தனித்துவைத்தல், பாதுகாத்தல் போன்றவை மரணதண்டனைக்குரிய குற்றங்களாக டச்சுகாரர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது.
1658-நவம்பர் -20 - போத்து கேயர் மீதான வெற்றிக்கு நன்றி சொல்லும் நாளாக இன்நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.
1659 - பிரித்தானியர்களான கப்டன் ரொபேட் நொக்ஸ், அவனது மகனும் 'ஆன்போர்க்கப்பல்' ஐ சேர்ந்த சில சிப்பந்திகளும் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டு கண்டிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
1661 - பால்தேயுஸ் எனப்படும் புரட்டஸ்தாந்து பாதிரியாரும், வரலாற்றாசிரியருமான பருத்திதுறைக்கு விஜயம் செய்தார். ஒர் அழகான கோட்டையும், டச்சுக்கோவிலும் இங்கே கட்டப்பட்டது.
1661 - முத்துக்குளிக்கும் தொழில் ஆரம்பிக்கப்பட்டது.
1676 - கோவாவில் பிறந்த யோசப் வாஸ் குருவாக திரு நிலைப்படுத்தப்பட்டார்.
1678 - வட்டுக்கோட்டையில் முதலாவது டச்சுக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது. பின்னாளில்1 816 ஆம் ஆண்டில் பிரவுண் றிக் என்ற கவர்னரால் அமெரிக்க மிசனரி மாருக்கு,அவர்கள் யாழ்ப்பாணம் வந்தபோது இக்கோயில் ஒப்படைக்கப்பட்டது.
1679 - 20 வருடங்களின் பின் நொக்ஸ் கண்டிச்சிறையில் இருந்து தப்பி யோடி என்னுமிடத்தில் இருந்த டச்சுகாரர்களிடம் வந்தடைந்தான்.
1682 - கோவாவில் புனித பிலிப் நேரியாரின் சபை (பிரார்த்தனை இடம்) நிறுவப்பட்டது.
1682 - விக்கிரக ஆராதனை,ஆவிகளின் ஆராதனை தண்டனைக் குரியவை என கவர்னர் லோரன்ஸ் பொன் பைல் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
1685 - யோசப் வாஸ் சுவாமிகள்,புனித பிலிப் நேரியாரின் சபையில் இனைந்தார்.
1687 - பிலிப் நேரியார் சபையை சேர்ந்த யோசப் வாஸ் அடிகளார் ஓர் பிச்சைகாரனாக (யாசகன்) வேடம் பூண்டு யாழ்ப்பாணம் வந்தார்.அங்கு சில்லாலையிலும் அதை சுற்றிய கிராமங்களிளும் வேதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
1688 - யாழ்ப்பாண இராச்சியத்தில் 180000 பேர் ஞானஸ்தானம் பெற்றுக்கொண்டதாக
பால் தேயுஸ் என்கிற டச்சு பாதிரியார் அறிவித்தார்.
1689 - புளோரிஸ் புனொம் என்பவர் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
1690 - டிசம்பர் 24 - கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட நல்லிரவில் ஒன்று கூடிய கத்தோலிக்கர்கள்,பொன் நீட் என்பவரின் கட்டளைப்படி கைது செய்யப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டனர்.
1691 - யோசப் வாஸ் வன்னி,புத்தளம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தார்.
1692 - யோசப் வாஸ் கண்டி சென்று அங்கு கத்தோலிக்க சமயத்தை மீளவும் நிறுவ முயற்ச்சி செய்தார். அங்கு கைது செய்யப்பட்டு 2 வருடங்கள் சிறைவைக்கப்பட்ட போது சிறைக்குள் கத்தோலிக்க மதத்தை பரப்பினார்.
1694 - யோசப் வாஸ் மாதோட்டம், பூனகரி, யாழ்பாணம் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்தார்.
1694 யூலை 3 - யாழ்ப்பாணக் கமாண்டர் புளொரிஸ் புளொம் மரணமடைந்தார்.
1694 - கென்றிக் சுவாடொர் கூன் யாழ்ப்பாண கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார். டச்சுகிழக்கிந்திய கொம்பனியை வடக்கில் பேணுவதற்கு மிகவும் தரமான செயற்பாடுகளை செய்த அதிகாரியாக இவருடைய வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1696 - இலங்கை ரோமன் கத்தோலிக்க சபையின் குரு முதல்வராக யோசப் வாஸ் நியமிக்கப்பட்டார்.
1697 - ஜெராட் டி கீர் என்கிற கவர்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
1700 - வீரமாமுனிவர் எனப்படும் யோசப் பெஸ்கி இந்தியா வந்து சேர்ந்தார்.
1703 - வண ஜேக்கப் கொஸ்சால்வேஸ் யாழ்ப்பாணம் வந்தார். அவர் கத்தோலிக்க குருவானவராகும்.
1704 - கவர்ணர் கோர்ணலிஸ் ஜேம்ஸ் சீமோன் யாழ்ப ;பாணத்திற்கு விஜயம் செய்தார்.
1705 - டச்சுக்காரர்கள் கொழும்பில் ஓர் குரு மடத்தை ஆரம்பித்தனர் கிரேக்கம், எபிரேயம், லத்தின், டச்சு, போத்துகீஸ், சிங்களம், தமிழ் மொழிகள் இங்கு கற்பிக்கப்பட்டன.
1707 - யூன் 4 டச்சு அரசாங்கத்தால் தேச வழமைச்சட்டம் பிரகடனப்படுத்தப்படது இதுவே சிவில் நீதிமன்றங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது.
1711 - யோசப் வாஸ் அடிகளார் கண்டியில் மரணமடைந்தார்.
1711 யூன் 6 - இந்து மத சடங்குகள் டச்சு அரசாங்கத்தால் கடும் தண்டனைக்குரிய குற்றங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன.
1715 - கத்தோலிக்க குருமார் ஞானஸ்தானம் வழங்குவது தடைசெய்யப்பட்டது.
1715 - ரோமன் கத்தோலிக்கர்கள் பொதுவாக ஒன்று கூடுவதும்,தனியாக சடங்கு செய்வதும் தடை செய்யப்பட்டது.
1719 - கவர்ணர் 'றம்ப்' யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
1722 - யேக்கப் டி யொங் (சீனீயர்) யாழ்ப்பாண தளபதியாக நியமிக்கப்பட்டார்.
1726 - யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்ததால் பெரும் பட்டினியும், நோயும் உண்டாயிற்று.
1732 ஆகஸ்ட் 25 - கோட்டாஸ் வூட்டாஸ் என்பவர் யாழ்ப்பாண கமாண்டராக நியமிக்கப் பட்டார்.
1736 - சுயபாசையில் புத்தகங்களை வெளியிடுவதற்காக டச்சு அரசாங்கத்தால் ஓர் அச்சகம் நிறுவப்பட்டது. இது மிகவும் தீவிரமாக செயற்பட்டது.
1739 - கவர்ணர் பொன் இமொப் யாழ்ப்பாணத்திற்கும்,மன்னாருக்கும் விஜயம் செய்தார்.
1740 - ஒரு தொகுதி 'தோம்பு' தொகுக்கப்பட்டது.
1742 - வீரமாமுனிவர் எனப்படும் ஜோசப் பெஸ்கி மணற்பாறையில் மரணமடைந்தார்.
1746 - கவர்ணர் ஸ்ரெய்ன் பொன் கொல்னஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
1746 - ஒரு முத்துக்குளிப்பு நிலையம் 4766 பவுண்ஸ் பணம் லாபமீட்டியது.
1747 - ஓர் முத்துக்குளிப்பு நிலையம் 21400 பவுண்ஸ் லாபமீட்டியது.
1748 - யேக்கப் டி ஜொங் (யூனியர்) யாழ்ப்பாண கமாண்டராக நியமிக்கப்பட்டார்.
1748 - ஓர் முத்துக்குளிப்பு நிலையம் 38580 பவுண்ஸ் லாபமீட்டியது.
1748 - ரோமன் கத்தோலிக்கரை குருவாக கற்பித்தல் தடைசெய்யப்படுகிறது எனப்பிரகடனப்படுத்தப்பட்டது.
1749 - ஒரு முத்துக்குளித்தல் நிலையம் 68375 பவுண்ஸ் லாபமீட்டியது.
1749 - வணக்கத்துக்குரிய பிலிப் மெல் கோலால் கிரேக்க மொழியில் இருந்து தமிழிற்கு மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு புத்தகம். டச்சு அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
1751 - கத்தோலிக்க குருமார் திருப்பலி நிறைவேற்றுவது தடைசெய்யப்பட்டது.
1753 - ஒரு முத்துக்குளித்தல் நிறுவனம் 6360 பவுண்ஸ் லாபமீட்டியது.
1754 - யாழ்ப்பாணத்து தோம்பு இறுதியாக மேற்பார்வை செய்யப்பட்டது.
1754 - ஒரு முத்துக்குளித்தல் நிலையம் 1469 பவுண்ஸ் லாபமீட்டியது.
1756 - தெல்லிப்பளையை சேர்ந்த பூலோகசிங்கம் முதலியார் பிலிப் குமாரவேலன் யாழ்ப்பாண பட்டிணத்தில் கிழக்கிந்திய கம்பனியின் முதலாவது சுதேச வைத்தியராக நியமிக்கப்பட்டார்
1758 - கத்தோலிக்க திருமணங்களுக்கு வரி விதிக்கப்பட்டது.
1758 - யூன் 26 வண்ணார் பண்ணையை சேர்ந்த டொன் பிலிப்பு சிற்றம்பல முதலியார் கிழக்கிந்திய கம்பனியின் தரகராக நியமிக்கப்பட்டார்.
1759 மார்ச் - பஸ்கா விசிறி டச்சு மூதாதையர் மத்தியில் பயன்பாட்டிற்கு அறிமுகம்.