பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே 18 அன்று பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் றிபப்ளிக் என்னும் இடத்தில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை அருகில் இருந்து தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு பேரணியாக பஸ்ரில் என்னும் இடத்தை நோக்கி சென்றடைந்து.
சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களும் அந்தச் சம்பவங்களில் நேரடியாக கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்களும் அதில் பங்கெடுத்த போராளிகள் என பல தரப்பினரும் இந்த உணர்வுபூர்வமான நினைவேந்தலில் பங்கெடுத்துக் கொண்டனர்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட நினைவேந்தலானது பல உப அமைப்புகளின் உதவியோடு பெரும் திரளான வலிசுமந்த மக்களின் உருக்கமான உணர்வுகளுடன் மலர்தூவி இழந்தோரை மனதில் நிறுத்தி நினைவு வணக்க நிகழ்வுகள் பேர் எழுச்சியாக நிறைவு பெற்றது