Breaking News
அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும்!
.

யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்று (05) பார்வையிட்டார்.
தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும் இடங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தார்.
அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், வெட்ட வெட்ட பூதம் கிளம்புவது போல் சுன்னத் பிரச்சனை மிகவும் பூதாகரமாக தோன்றியுள்ளது இதில் அரச அதிகாரிகளும் மற்றும் தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டனை பெற வேண்டும்.