பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது.
கைதுக்கு முன், ஹொங்கொங்கில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டுட்டெர்டே, "இது என் விதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து மணிலா விமான நிலையத்தில் வைத்து இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
2016-2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய "போதைப்பொருளுக்கு எதிரான போர்" தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம்
டுட்டெர்டேவின் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 6,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது, இதில் பலர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைதுக்கு முன், ஹொங்கொங்கில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டுட்டெர்டே, "இது என் விதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டால், சிறையில் அடைக்கப்பட்டால், அதை எதிர்க்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது கைது, பிலிப்பைன்ஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடையே நீதி கிடைத்ததாக உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
டுட்டெர்டே தற்போது அதிகாரிகளின் பிடியில் உள்ளார் மற்றும் அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், அரசு வைத்தியர்களால் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.