Breaking News
தமிழ்மொழி, ஆப்பிளைப் போலவே மணம் வீசியிருக்கிறது.
ஆப்பிள் பழம்கூட ஐரோப்பா கண்டத்துக்குச் சொந்தமானது இல்லை.
மத்திய ஆசியாவிலும், ஒருகாலத்தில் தமிழ்மொழி, ஆப்பிளைப் போலவே மணம் வீசியிருக்கிறது.
ஆப்பிள் பழம். இந்தப் பெயரைக் கேட்டதும் இந்தப் பழம் ஏதோ ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களுக்குரிய பழம் போல நமக்குத் தோன்றும்.
ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஆப்பிள் பழம் தோன்றிய நாடு, மத்திய ஆசியாவில் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே உள்ள கசக்ஸ்தான் நாடு.
கி.மு.1,500ஆம் ஆண்டளவில், கசக்ஸ்தான் பகுதியில் இருந்து ஆப்பிள் விதைகள் ஐரோப்பாவுக்குப் பரவி, அதன்பிறகுதான் கிரேக்கர்கள், ரோமானியர்கள், எட்ருஸ்கன்கள் உள்பட பலர் ஆப்பிளைப் பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்துவதுபோல இன்றும் கசக்ஸ்தான் நாட்டின் தியான் ஷான் மலைத் தொடரில் பலவிதமான பழங்கால ஆப்பிள் மரக்காடுகள் இருக்கின்றன.
ஆக, ஆப்பிள் பழம்கூட ஐரோப்பா கண்டத்துக்குச் சொந்தமானது இல்லை.
அதுவும் ஆசியா கண்டத்தில் இருந்துதான் தோன்றியிருக்கிறது.
சரி. ஆப்பிள் எங்கு வேண்டுமானாலும் தோன்றிவிட்டுப் போகட்டும். அதில் நமக்கு எந்தப் பிறழ்ச்சனையும் இல்லை. அதுதொடர்பாக நாம் இன்னொன்றைக் கவனிக்கலாம்.
1929 முதல் 1997 வரை கசக்ஸ்தான் நாட்டின் தலைநகரமாக இருந்த நகரம் அல்மா அத்தா (Alma ata). (இன்று அல்மாத்தி என்று இந்த நகரம் அழைக்கப்படுகிறது). அல்மா அத்தா என்ற சொல்லுக்கு ‘ஆப்பிளின் தந்தை’ என்று அர்த்தமாம்.
அல்மா என்பது ஆப்பிளைக் குறிக்கும் சொல். கிரிமியத் தீபகற்பத்தின் தார்த்தாரிய மொழியில்கூட அல்மா என்றால் ஆப்பிள் என்பதுதான் அர்த்தமாம். சரி. அத்தா என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?
அத்தா என்பது தமிழில் தந்தையைக் குறிக்கும் சொல். அந்தச் சொல் கசாக்கிய மொழியிலும் கூட தந்தையைதான் குறிக்கிறது போலும். அதனால்தான் அல்மா அத்தா என்ற பெயர் அந்த நாட்டில் உள்ள ஒரு நகரத்துக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
ஆக, மத்திய ஆசியாவிலும், ஒருகாலத்தில் தமிழ்மொழி, ஆப்பிளைப் போலவே மணம் வீசியிருக்கிறது.
சரி. அத்தா என்பது தந்தையைக் குறிக்கும் சொல் என்றநிலையில், அல்மா என்பது தமிழில் ஆப்பிளைக் குறிக்கும் பழங்காலச் சொல்லாகக் கூட இருந்திருக்கலாம்.
ஆகவே, நாம் இனிமேல் ஆப்பிள் பழத்தை தமிழில் அல்மா என்று அழைத்தால் என்ன?
மோகன ரூபன் முகநூல் பதிவு 19.08.2024