Breaking News
தன்னை நஞ்சு வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக முன்னாள் அமைச்சர் தகவல்.
சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக இவ்வாறு நஞ்சு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை நஞ்சு வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக முன்னாள் அமைச்சர் தகவல்.
தம்மை கொலை செய்வதற்கு நஞ்சூட்டப்பட்டது என முன்னாள் அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக இவ்வாறு நஞ்சு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தாம் ஜப்பானுக்கு சென்றிருந்த போது நஞ்சு வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து அண்மையில் அரசியல்வாதி ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தமக்கு யார் நஞ்சூட்டினார்கள் என்பது குறித்தோ யார் இந்த சதித் திட்டத்தின் சூத்திரதாரி என்பது பற்றியோ ரொசான் ரணசிங்க வெளிப்பைடையாக கருத்து வெளியிடவில்லை.