Breaking News
அநுர வெற்றி; பந்தயத்தில் தோற்று சொகுசு படகை இழந்த நபர்
.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவு தொடர்பாக நடத்தப்பட்ட பந்தயத்தில் தோல்வியடைந்த நபர் ஒருவர் தனது சொகுசுப் படகை இழந்துள்ளார்.
மிரிஸ்ஸ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு பந்தயத்தில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியின் படி, அந்த நபர் பந்தயத்தில் தோல்வியடைந்த பின்னர், மிரிஸ்ஸ பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தனது சொகுசுப் படகை இழந்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு எதிராக குறித்த நபர் பந்தயம் கட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.