Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

லொறியில் 2 குழந்தைகள் உட்பட 11 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு! அதிர்ச்சி சம்பவம்

.

தெற்கே மெக்சிகோ நகரில் லொறியொன்றில் இரண்டு குழந்தைகள் உள்பட 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அகாபுல்கோ நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் நின்றிருந்த லொறியில் குறித்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என பொலிஸார் நேற்றையதினம் (07-11-2024) தெரிவித்தனர்.

சில்பான்சிங்கோ நகரில் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் மேயர் தலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது. இந்நகரம், குர்ரீரோ என்ற தெற்கு மாகாணத்தின் தலைநகர் ஆகும்.

இந்நகரில் போதை பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து, பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதே பகுதியில் 5 சிறுவர்கள் உள்பட 17 பேர் கடந்த வாரம் காணாமல் போனார்கள்.

இருப்பினும், இந்த 2 சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா? என்பது உடனடியாக தெரிய வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். முன்னாளில் இது பணக்காரர்கள் விளையாட கூடிய பீச் பகுதியாக இருந்தது.

ஆனால், குற்ற வன்முறை சம்பவம் நடக்கும் பகுதியாக பின்னர் மாறி விட்டது.

இதே அகாபுல்கோ புறநகரில், ஒரே குடும்பத்தின் 5 உறுப்பினர்களை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சுட்டு படுகொலை செய்த சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.