Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உயிரிழந்தோரை நினைவுக்கூர தடையில்லை; அரசாங்கம் இன்று வெளியிட்ட அறிவிப்பு

.

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூர அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது என்பதுடன், தடைகளை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியும் இல்லை. ஆனால், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பையோ அல்லது அதன் உறுப்பினர்களையோ நினைவுக்கூர முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களை நினைவுக்கூர அரசாங்கம் அனுமதித்துள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கம் வெளியிட்டிருந்த வர்த்தமானியின் பிரகாரமே நாம் செயல்படுவோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவாக கூறியுள்ளார். பயங்கரவாத அமைப்பையோ அல்லது அதன் உறுப்பினர்களை நினைவுக்கூரவோ இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறவில்லை.

குறித்த வர்த்தமானியின் பிரகாரம் பயங்கரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளையோ அல்லது அதன் உறுப்பினர்களையோ நினைவுக்கூர முடியாது. அதேபோன்று குறித்த அமைப்புகளுக்காக நிதி சேகரித்தல், பிரச்சாரம் செய்தல், ஒருங்கிணைத்தல், கொடிகளை பயன்படுத்தல், சின்னங்களை பயன்படுத்தல், பாடல்களை பயன்படுத்தல் என அனைத்து விடயங்களும் இதன் ஊடாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணிகளின் பிரகாரம்தான் அரசாங்கம் செயல்படும். இதனையே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிகவும் தெளிவாக ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால், உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கு தடையை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியில்லை.” என்றார்.