Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்!; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்றம்

.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரது குழந்தையும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே நேற்று (19) மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் அவர் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை எனவும், அவர் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்த போதும் வைத்தியர்கள் இயற்கை முறையில் குழந்தையைப் பிரசவிக்க முயற்சி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் மரணம் அடைந்த விடயத்தை கூட நீண்ட நேரமாக தமக்குத் தெரிவிக்கவில்லை எனவும், கர்ப்பிணியின் உடலைப் பார்ப்பதற்குக் கூட பெற்றோரை வைத்தியசாலை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கர்ப்பிணியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் அவரது மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என தெரிவிக்கும் வரை அவரது உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமக்கு நீதி கிடைக்கும் வரை அவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை எனத் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதேவேளை சம்பவ இடத்தில் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலை பணிப்பாளரோ, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தரவில்லை எனவும் அவருடைய தொலைபேசியும் இயங்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்பதாகவும், தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றை கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம் பெற்ற மூன்றாவது மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.