Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

113 ஆசனங்களேஎங்கள் இலக்கு: சஜித் அணி தெரிவிப்பு

.

“ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர். எனவே, நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலின்போது ஜனநாயகம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

“விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னர் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் ஜே.வி.பியினர். இரண்டு தடவைகள் அவர்கள் கிளர்ச்சி செய்தனர். அதனால்தான் அரசியல்வாதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நேரிட்டது. ஜே.வி.பியினரிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக்கொள்ளவே அன்று பொலிஸ் பாதுகாப்பைக் கோரினோம்.

இன்று எமக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், எதற்காகப் பொலிஸ் பாதுகாப்பு பெறப்பட்டது என்ற வரலாற்றை மறக்கக்கூடாது.

தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் குழப்பம் இருக்கவில்லை. இதனை மதிக்கின்றோம். இப்படியே ஜனநாயக வழியில் ஜே.வி.பி. பயணிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை இலக்கு வைத்தே போட்டியிடுகின்றோம். 113 இற்கும் மேற்பட்ட ஆசனங்களை எதிர்பார்க்கின்றோம். நாட்டின் ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற முறைமையை பாதுகாக்க மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகின்றோம்.

ஆயத பலம் ஊடாக இரு தடவைகள் ஆட்சியைக் கைப்பற்ற முற்பட்டவர்களிடம்தான் தற்போது ஆட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகம் பற்றியும் மக்கள் சிந்திக்க வேண்டும்.” – என்றார்.