ரஷ்ய – உக்ரெய்ன் போரிடுவதற்காக ஈடுபடும் சீலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாலசூரிய தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் ரஷ்யாவுக்குச்செல்லும்.
ரஷ்ய – உக்ரெய்ன் போரில் ஈடுபடும் இலங்கை இராணுவம் – அழைத்துவர ஏற்பாடு.
இதனால், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் ரஷ்யாவுக்குச் சென்று இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான திட்டத்தை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்ஹ, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த மாதம் 25, 26,27 ஆகிய திகதிகளில் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளை மொஸ்கோவில் சந்திக்கவுள்ளனர்.
போர்க்களத்தில் உள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை மீட்டுத் தங்களை மீளவும் நாட்டுக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வருவதாக டெய்லி மிரர் கூறுகின்றது.
படையினருக்கு நல்ல ஊதியம் மற்றும் பல சலுகைகள் பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
ரஷ்ய – இலங்கை என்ற இரு நாடுகளுக்கிடையில் எதுவிதமான பிரச்சினையும் இல்லாமல் இந்த விடயத்தை தீர்க்கும் நடிவடிக்கையில், இராணுவ வீரர்களை முன்கூட்டியே திருப்பி அனுப்புவதற்கான விடயங்கள் குறித்து விவாதிக்க ரஷ்யா உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
ரஷ்யாவின் கூலிப்படை நிறுவனங்களுக்கு சட்ட விரோதமான ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இரண்டு ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் உக்ரெய்னில் இலங்கைக்கான தூதுவர்கள் இல்லாத காரணத்தினால் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரெய்னில் போரிடும் இலங்கையர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் செயல்முறையில் சில தடைகள் ஏற்பட்டன.
ஆனால், துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம், உக்ரெய்னில் போரிடும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களைக் கோரி உக்ரெய்ன் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடந்த சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது.
இதனடிப்படையில் முன்னதாக ரஷ்யாவுக்கு எதிராக உக்ரெய்ன் படையில் போரிட்ட இலங்கை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், போரில் ஈடுபடுபவர்களின் தற்போதைய நிலை குறித்து தகவல் அறிய முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.