Breaking News
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!
.
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!
வரக்காபொல பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி விபத்தில் காயமடைந்த 13 பேரும் சிகிச்சைக்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.