அனுரவுக்கு ஆபத்து: தீவிரமாக பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது.
இலங்கை முழுவதும் பல்வேறு துறைசார்ந்தர்கள் மற்றும் தொழிற்சங்க மாநாடுகளை தேசிய மக்கள் சக்தி கடந்த சில மாதங்களாகவே நடத்திவருகிறது.
கடுமையான பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென அக்கட்சியின் ஆதரவாளர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளனர்.
அதன் பிரகாரம் தற்போது கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அனுரவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
எதிர்காலத்தில் அனுரகுமார ஜனாதிபதித் தேர்தலுக்காக பங்குபற்றும் கூட்டங்களில் விசேட பாதுகாப்புகள் இருக்குமென தெரியவருகிறது. அத்துடன், அக்கட்சியின் முன்னிலை தலைவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.