Breaking News
லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல் – ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்டதளபதி பலி
.
லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.
இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது. லெபானின் புறநகரில் உள்ள இந்த ஹெஸ்புல்லாக்களின் வலுவிடம் என்பது குறிப்பிடதக்கது.
தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.