Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் இரண்டு யாழ். மீனவர்கள்!!

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு யாழ். மீனவர்களையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து மீனவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவிக்கையில், 
"கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது, இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு செயலிழந்தது. இதனால் ஆறு நாட்களுக்கும் மேலாகக் குடும்பத்தாருடனான அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்கள் நேற்று (05) இந்தியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளனர்." 

அவர்களின் குடும்பப் பொருளாதார நிலமையைக் கருத்தில் கொண்டு, அவர்களை விரைவாகத் தாயகம் அழைத்து வரவும், வாழ்வாதாரமாக விளங்கும் படகு மற்றும் வலைகளை அவர்களிடமே ஒப்படைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
மேலும், காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிகளில் உதவி புரிந்த கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அனைவருக்கும் உறவினர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.