Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9இற்கு கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலர் தலைமையில் நேற்று (12.12.2024) புதன்கிழமை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலரினால் பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அறிவுறுத்தல்கள் உரிய தரப்புகளுக்கு வழங்கப்பட்டன.

1. பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி மாலை வேளையில் பயணிக்கும் யாழ்ப்பாணம் – உசன் வரையான இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவையை கெற்பேலி வரையில் நீடிப்பு செய்யுமாறு இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கு யாழ். மாவட்ட செயலர் அறிவுறுத்தினார்.

2. மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாவட்ட செயலர் அறிவுறுத்தல் வழங்கினார்.

3. முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தரம் 9 இற்குக் கீழ்ப்பட்ட வகுப்புகளை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்திலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் மாணவர்களின் இணை பாடவிதானச் செயற்பாடுகளுக்காகக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்த தனியார் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட செயலர் கேட்டுக்கொண்டதுடன், இது தொடர்பில் பிரதேச செயலாளர்களை உரிய கல்வி நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், போதைப்பொருள் பாவனை மற்றும் மாவட்ட ரீதியாக கிடைக்கப் பெற்ற 21 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தொடர்பாகவும் அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.