Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெள்ள அனர்த்த நிவாரணத்துக்காக வடக்குக்கு 1,872 மில்லியன் ஒதுக்கீடு!

ஏனைய மாவட்டங்களின் பாதிப்பு மற்றும் தேவைப்பாடுகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு சுமார் 1,872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் - கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
அண்மைய நாட்களில் முழு நாட்டையும் புரட்டி போட்ட டிட்வா புயல் முழு நாட்டையும் வரலாறு காணாத அனர்த்தத்துக்கு தள்ளி உள்ள நிலையில் பல உயிர்களையும் காவு கொண்டுள்ளமை அனைவரும் அறிந்த விடயம். 

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அநுர குமார திசாநாயக்க பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள கட்டியமைப்பதற்கு அனத்த நிவாரண பணிக்காக சுமார் 10 ஆயிரத்து 290 மில்லியன் ரூபாக்களை முதற்கட்டமாக முழு நாட்டுக்கும் ஒதுக்கியுள்ளார். 
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அதிக பாதிப்புக்கு உள்ளான மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக 954 மில்லியனும் , யாழ். மாவட்டத்திற்கு 365 மில்லியனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 206 மில்லியனும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 189 மில்லியனும் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு 158 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஒதுக்கப்பட்ட நிதிகள் சகல மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பில் பாதிப்புக்கு உள்ளான தரவுகளின் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக பங்கீட்டு வழங்கப்படும். 
வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மன்னார் மாவட்டம் விளங்குகின்ற நிலையில் 954 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஏனைய மாவட்டங்களின் பாதிப்பு மற்றும் தேவைப்பாடுகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அது மட்டுமல்லாது மாகாண சபைகளுக்கும் விசேடமாக அனர்த்த நிவாரண நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனூடாக பெறப்படுகின்ற நிதிகளும் பயனுள்ள வகையில் பங்கீடு செய்வதற்கு தயாராக இருக்கிறோம். 

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் உயிரிழப்புக்கள் குறைவாக காணப்பட்டாலும் மக்களை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பு அதிகமான பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளதாக அறிய கிடைக்கின்ற நிலையில் அதன் முழுமையான புள்ளிவிபரங்கள் இறுதி செய்யப்படவில்லை. 

மன்னார் மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் இறந்திருக்கலாம் என எதிர்வு கூறப்படும் நிலையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் தரவுகள் இறுதி செய்யப்படவில்லை. 
இவ்வாறான ஒரு நிலையில் முழு நாடும் வரலாறு காணாத அனர்த்த நிலையை சந்தித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தமது குறுகிய அரசியல் சுய இலாபத்தை தேடிவருகின்றன்ர். 

அனர்த்த நிலைமையை காரணம் காட்டி ஆட்சியை கவிழ்த்து விடலாம் என ஒரு கூட்டமும் ஆட்சியை எம்மிடம் தாருங்கள் என இன்னொரு கூட்டமும் மக்கள் நலன்களை சிந்திக்காமல் அதிகார மோகத்தில் திரிகின்றனர். 
நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் நிலையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் அரசாங்கத்துக்கு சவாலான விடயமாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் எந்த சவாலையும் ஏற்ற தயாராக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.