Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இத்தாலியில் மனிதநாகரீகம் தோல்வி அடைந்து விட்டதாக கண்டனம்! விபத்துக்குள்ளான இந்திய தொழிலாளியை சாலையில் வீசிய சம்பவம்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்னம் சிங்கை அப்பகுதி போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இத்தாலியில் உயிருக்கு போராடிய இந்திய விவசாயி! சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!

 

த்தாலியில் விவசாயக் கூலியாக வேலை பார்த்த இந்திய தொழிலாளி விபத்துக்குள்ளான நிலையில் அவரை காப்பாற்றாமல் சாலையில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் பலர் பலவிதமான வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.அவ்வாறாக இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் அருகே உள்ள லட்டினா என்ற பகுதி இந்திய புலம்பெயர் தொழிலாளிகள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது. இவர்கள் அங்குள்ள பண்ணைகளில் விவசாயக் கூலிகளாகவும், கட்டுமான பணியாளர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.அப்படியாக இந்தியாவை சேர்ந்த 31 வயது விவசாய கூலியான சத்னம் சிங் என்பவர் வயலில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக வைக்கோல் இயந்திரத்திற்குள் சிக்கி அவரது கை துண்டாகியுள்ளது. அவரை வேலைக்கு வைத்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் காரில் கொண்டு சென்று சாலையில் வீசியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்னம் சிங்கை அப்பகுதி போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இத்தாலிய இடதுசாரி அமைப்புகள், எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இத்தாலியில் மனிதநாகரீகம் தோல்வி அடைந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள இத்தாலி நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சர் மரினா கால்டோரன், இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என கூறியுள்ளார்.