Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வியட்நாமில் இருந்து அதிசொகுசுஜெட் விமானத்தில் வந்திறங்கிய அநுர; நெட்டிசன்கள் கேள்வியால் எழுந்தது சர்ச்சை!

தேர்தல் வாக்களிப்புக்கு வரவேண்டி இருந்ததால் ஜனாதிபதிக்கான இந்த விமானத்தை வியட்னாம் அரசே ஒழுங்குபடுத்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியட்நாமுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தில்  நாடு திரும்பினார்.

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்  (Luong Cuong) இன்அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த அரச விஜயத்தை  மேற்கொண்ட அவர்ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்   சிறப்புரையாற்றினார்.

இந்நிலையில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தில்  நாடு திரும்பினார்.

அதிசொகுசு ஜெட் விமானமான Embraer Legacy 600 மூலம் ஜனாதிபதி பயணித்தது என்ன அடிப்படையில் அதற்கு செலவளித்தது யார் என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி விமர்சித்திருந்தனர்.

எவ்வாறாயினும் தேர்தல் வாக்களிப்புக்கு வரவேண்டி இருந்ததால் ஜனாதிபதிக்கான இந்த விமானத்தை வியட்னாம் அரசே ஒழுங்குபடுத்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனாதிபதி அவரின் நிதியை பெற்றோ அல்லது அரச பணத்தை செலவிட்டோ இந்த விமானத்தை பயன்படுத்தவில்லை என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறிப்பிட்டுள்ளன.