Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கொங்கோவில் மர்ம காச்சலால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ; வௌவால் காரணமா?

.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மர்ம நோயால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வடமேற்கில் உள்ள போலோகோ நகரில் முதல் வெடிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்கா அலுவலகம் கூறியது.

வௌவால் சாப்பிட்டு  உயிரிழப்பு.

ரத்தக்கசிவு காய்ச்சல் அறிகுறிகளைத் தொடர்ந்து மூன்று குழந்தைகள் வௌவால் சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெடிப்பு ஜனவரி 21 அன்று தொடங்கியது, மேலும் 53 இறப்புகள் உட்பட 419  பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது. பிப்ரவரி 9 ஆம் தேதி போமேட் நகரில் இந்த மர்ம நோய் இரண்டாவது முறையாக பரவியது. 13 வழக்குகளின் மாதிரிகள், காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாசாவில் உள்ள தேசிய உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. அனைத்து மாதிரிகளும் எபோலா அல்லது மார்பர்க் போன்ற பிற பொதுவான ரத்தக்கசிவு காய்ச்சல் நோய்களுக்கு எதிர்மறையாக உள்ளதுடன் சிலவற்றில் மலேரியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .அதேவேளை கடந்த ஆண்டு, காங்கோவின் மற்றொரு பகுதியில் டஜன் கணக்கான மக்களைக் கொன்ற மற்றொரு மர்ம காய்ச்சல் போன்ற நோய் மலேரியாவாக இருக்கலாம் என்று கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.