Breaking News
யாழில் இளம் வேட்பாளர் உயிரிழப்பு !
.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவரான வேட்பாளரே உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வேட்பாளரின் மறைவிற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.