Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள்!

சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து பாலமீன்மாது, வங்காலை, மண்டைதீவு, இறக்கக்கண்டி, உள்ளங்காளி கலப்பு, வாழைச்சேனை, ஊறணிக் குளம், ஒலுத்துடை, கடைக்காடு, சுண்டிக்குளம், மட்டக்களப்பு நாவக்காடு கலப்பு, வவ்னதீவு கலப்பு மற்றும் வலைப்பாடு  கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் 07 ஏப்ரல் வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், இரவு நேரங்களில் சுழியோடி மீன்பிடித்தல், சட்டவிரோத கடலட்டைகளை பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடற்படை நாற்பத்தைந்து (45) சட்டவிரோத வலைகள், ஐம்பத்தைந்தாயிரம் (50,005) கடலட்டைகள், பதின்மூன்று (13) டிங்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான சுழியோடி உபகரணங்களை மேற்படி கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை மாமுனை, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மீன்வள ஆய்வு அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.