Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தனிமையடைந்துள்ள டளஸ்: சஜித்துடன் இணைகிறார்

.

 

சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளார்.

சுதந்திர மக்கள சபையின் பல உறுப்பினர்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உட்பட டளஸுடன் கடந்தகாலத்தில் இணைந்து செயல்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதசவுக்கு நேரடியாக ஆதரவு வழங்கியுள்ளனர்.

டளஸ் அழகப்பெரும மாத்திரம் தனியாக செயல்பட்டு வந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பிரதமர் பதவி வழங்க வேண்டுமென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் பிரதி தலைவர் பதவியை வழங்க வேண்டுமென்றும் டளஸ் அழகப்பெரும கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்.

என்றாலும், அதனை சஜித் பிரேதாச நிராகரித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே டளஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.