Breaking News
சஜித் பிரேமதாசவைப் படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி முயற்சி
ஜே.வி.பி சஜித்தை கொலை செய்ய திட்டம் தீட்டியது: ஜொன்ஸ்டர்ன்.
ஜே.வி.பி சஜித்தை கொலை செய்ய திட்டம் தீட்டியது: ஜொன்ஸ்டர்ன்.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கெதிரான பொதுமக்களின் அரகலய போராட்டக் காலத்தில் சஜித் பிரேமதாசவைப் படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி முயற்சித்ததாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
2022ஆம் ஆண்டின் மே மாதம் 09ஆம் திகதி நடைபெற்ற வன்முறைகளின் போது குருநாகலையில் அமைந்திருந்த ஜோன்ஸ்டனின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த அலுவலகத்தைப் புனரமைத்து திறந்து வைக்கும் நிகழ்வின் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
அரகலய போராட்டக் காலத்தின் போது தேசிய மக்கள் சக்தி தனது ஆதரவுக் குழுக்களைக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைப் படுகொலை செய்யும் திட்டமொன்றைக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தரப்பில் இருந்தோ அல்லது சஜித் தரப்பில் இருந்தோ இதுவரை எதுவித கருத்தும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.